search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியவாத காங்கிரஸ் கட்சி"

    சரத்பவார் தேர்தல் டிக்கெட் வழங்கும்போது அவரது குடும்பத்தை மனதில் வைத்து கொண்டு செயல்பட்டுள்ளதாக உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். #LoksabhaElections2019 #Uddhavthackeray #SharadPawar
    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பர்பானி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

    இதேபோல கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரின் மகனும், சரத்பவாரின் பேரனுமான பர்த் பவாருக்கு மாவல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாவல் தொகுதியில் சிவசேனா வேட்பாளர் ஸ்ரீரங் பர்னேவை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    சரத்பவார் தேர்தல் டிக்கெட் வழங்கும்போது அவரது குடும்பத்தை மனதில் வைத்து கொண்டு செயல்பட்டு உள்ளார். தான் இல்லாவிட்டால் தனது மகன்.. மகன் இல்லாவிட்டால் தனது மருமகன்... இப்படி தான் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா?. சத்தாராவில் நாங்கள் ஒரு சுமைதூக்கும் தொழிலாளியின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #Uddhavthackeray #SharadPawar
    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் தாரிக் அன்வர் இன்று கட்சியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். #TariqAnwar #NCP #RafaleDeal
    புதுடெல்லி:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தாரிக் அன்வர். கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், அக்கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து இவருக்கும், கட்சி தலைவர் சரத் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.



    அதாவது,  ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடிக்கு ஆதரவாக சரத் பவார் பேட்டி அளித்தார். ரபேல் ஒப்பந்தத்தில் மோடியின் நோக்கங்கள் தவறானவை அல்ல என்று கூறியிருந்தார். இதனால் பவார் மீது கடும் அதிருப்தி அடைந்த தாரிக் அன்வர் இன்று தேசியவாத கட்சியில் இருந்து விலகி உள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடி மீது எந்த தவறும் இல்லை என மராத்தி சேனலுக்கு சரத் பவார் அளித்த பேட்டி என்னை மிகவும் காயப்படுத்தியது. இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எனது எதிர்கால அரசியல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. என் ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அறிவிப்பேன்’ என்றார். #TariqAnwar #NCP #RafaleDeal
    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #NationalistCongressParty
    மும்பை :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த பாட்டீல் கூறுகையில், வெள்ள பாதிப்புக்கு இலக்கான கேரளா மாநிலத்துக்கு கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசு கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தை பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #NationalistCongressParty
    ×